ஜாதகப் பொருத்தம் (Jathagam porutham), உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்ய உதவும். இருவரின் இயல்பு, பழக்கவழக்கங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.
ஜாதகப் பொருத்தம், இருவரின் வாழ்க்கைப் பாதைகள் எவ்வளவு ஒத்துப்போகின்றன என்பதை அறிய உதவும் ஒரு பாரம்பரிய முறையாகும். இது, அவர்களின் பொருளாதார வளர்ச்சி, எதிர்காலத்தில் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் மற்றும் குடும்ப வாழ்வின் இயல்பு ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகளை அளிக்கிறது. பொருத்தமான ஜாதகங்கள் கொண்டவர்கள், பொதுவாக ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.
ஆண் பெண் இருவரின் சாதகத்தையும் வைத்து பொருத்தம் பார்க்கும் முறை சாதகப் பொருத்த முறை ஆகும். பொதுவாக ஜாதக பொருத்த முறையில் பெண் ஜாதகத்தைத் தான் முதன்மையாக வைத்து பார்க்க வேண்டியது அவசியம் ஆகும்.
இருவரின் லக்கினம் மற்றும் சந்திரன் ஒன்றுகொன்று சஷ்டாஷ்டகமாக அமையக் கூடாது. அதாவது 6,8 ஆக அமையக் கூடாது. குறிப்பாக 16 வது நட்சத்திரத்தின் 4ஆம் பாதத்தில் நிற்கக் கூடாது.
பெண் சாதகத்தின் 1,2,4,5,7,9,10,11 பாவக அதிபதிகள் ஆண் சாதகத்தில், ஆட்சி, உச்சம், நட்பு, சம நிலையில் இருக்க வேண்டும். மாறாகப் பகை நீசம், அஸ்தமனம் பெறக் கூடாது. துர் ஸ்தானங்களில் இருக்கக் கூடாது.
தசை நடத்தும் அதிபதிகளும் சஷ்டாஷ்டகமாக இருக்கக் கூடாது.
இருவர் சாதகத்திலும் தோஷ சாம்யம் இருக்க வேண்டும்.
ஆண் பெண் இருவரும் அமாவாசை, கிரகணம் என பிறப்பு இருக்கக் கூடாது
தசா சந்திப்பு கூடாது. குறைந்தபட்சம் ஒரு வருடம் வித்தியாசம் இருக்க வேண்டும்.
செவ்வாய் தோஷம் இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும். அதாவது இருவருக்கும் செவ்வாய் தோஷம் இருக்கலாம். அல்லது இருவருக்கும் செவ்வாய் தோஷம் இருக்கக் கூடாது
ராசி மற்றும் நட்சத்திர அடிப்படையில் திருமணப் பொருத்தம்
தோஷம் இல்லாத நட்சத்திரங்கள்
மிருகசீரிடம், மகம், சுவாதி, அனுஷம் ஆகிய இந்த நான்கு நட்சத்திரங்களும் மகா நட்சத்திரங்கள் என்று கால விதானம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளன. எனவே பெண் ஆல்லது ஆண் மேற்கண்ட நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் பிறந்திருந்தால் பொருத்தம் பார்க்காமலேயே திருமணம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு தனியுரிமையும், ஒருவர் பிறந்த நட்சத்திரத்தின் மீது வாழ்வின் பல பாதிப்புகளை பிணைக்கின்றது. இவற்றில் தோஷம் இல்லாத நட்சத்திரங்களை கொண்டவர்கள் வாழ்க்கையில் சாதனைகளை எளிதில் அடையக்கூடும். இப்படி, "தோஷம் இல்லாத நட்சத்திரங்கள்" என்பது நல்ல வளர்ச்சி மற்றும் சமாதான வாழ்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
எண் கணித முறையில் பொருத்தம்
திருமணப் பொருத்தம் பார்க்கும் போது அவரவர் உடல் மற்றும் உயிர் எண்ணுக்கு ஏற்ற யோகமான தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும். திருமண நாள் குறிக்கு போது திருமண தேதியின் கூட்டு என்னும் திருமண தேதி, மாதம் வருடம் இவற்றின் கூட்டு என்னும் 1,3,6,9 என்று வருமாறு அமைப்பது மிகவும் நல்லது. மற்ற தேதிகள் உத்தமம் அல்ல.